அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் திறப்பு 3,000 கனஅடியாக அதிகரிப்பு

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு வினாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
செம்பரம்பாக்கம் ஏரி
Updated On :25 நவம்பர் 2020, 11:14 am

DIN

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு வினாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் தாக்கத்தால் பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருகின்றது. இதனால், இன்று நண்பகல் 12 மணிக்கு வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 4,400 கனஅடி வருவதால் படிப்படியாக தண்ணீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மதியம் 3 மணியளவில் வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதையடுத்து தற்போது வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.