
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நாளை காலை புயலாக மாற வாய்ப்புள்ளதால் கேரள மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது இன்று காலை தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கே ஏறக்குறைய 975 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது.
இது இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை காலை புயலாகவும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் வரும் 2-ம் தேதி மாலை இலங்கையை கடந்து குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும்.
இதையடுத்து தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிசம்பர் 2ஆம் தேதி கேரள மாவட்டங்களான இடுக்கிக்கு சிவப்பு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், பதனம்திட்டாவுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.