தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வெங்கல் அருகே சிலிண்டர் வெடித்து தீ விபத்து

வெங்கல் அருகே சாலையில் எச்சரிக்கை பெயிண்ட் அடிக்கும் போது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 2 பேர் காயங்களுடன் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

News image

கோப்புப்படம்

Updated On :6 அக்டோபர் 2020, 2:02 pm

DIN

வெங்கல் அருகே சாலையில் எச்சரிக்கை பெயிண்ட் அடிக்கும் போது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 2 பேர் காயங்களுடன் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த பாகல்மேடு கிராமத்தில் சாலைக்கு எச்சரிக்கை பெயிண்ட் அடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

இதில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நித்தியானந்தம், சிவநேசன் ஆகிய இருவர் காயமடைந்தனர். தீவிபத்து குறித்து தகவலறிந்த 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

இதைத் தொடர்ந்து காயமடைந்த ஊழியர்களை மீட்ட காவல்துறையினர் அவர்களை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வெங்கல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.