தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இறைச்சிக்காக கேரளத்துக்கு கடத்தப்பட்ட மாடுகள் பறிமுதல்

அவிநாசி அருகே பெருமாநல்லூரில் ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு இறைச்சிக்காக கடத்திச் செல்லப்பட்ட மாடுகளை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

News image

இறைச்சிக்காக கேரளத்துக்கு கடத்தப்பட்ட மாடுகள்

Updated On :6 அக்டோபர் 2020, 1:06 pm

DIN

அவிநாசி: அவிநாசி அருகே பெருமாநல்லூரில் ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு இறைச்சிக்காக கடத்திச் செல்லப்பட்ட மாடுகளை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

வெளிமாநிலங்களிலிருந்து கேரளத்திற்கு இறைச்சிக்காக மாடுகளை இரண்டு லாரிகளில் கடத்திச் செல்வதாக அறிந்த சிவசேனா கட்சியினர் லாரிகளை செங்கப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்குளி, பெருமாநல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ஆந்திராவிலிருந்து 29 மாடுகளும், ஹரியாணாவில் இருந்து 38 மாடுகளும் என மொத்தம் 67 மாடுகள் கேரள கோட்டயம் மற்றும் கொச்சி பகுதிகளுக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது.  

இதையடுத்து பெருமாநல்லூர் காவல்துறையினர் இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இரு லாரிகளை ஓட்டி வந்த நபர்கள் மீதும்,  பெருமாநல்லூர் காவல்துறையினர் பசுவதை தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.