மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

10 லட்சத்தை நெருங்குகிறது திமுகவின் இணையவழி புதிய உறுப்பினர் சேர்க்கை

திமுகவின் இணையவழி உறுப்பினர் சேர்க்கை 10 லட்சத்தை நெருங்குகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை தெற்கு திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

News image
உறுப்பினர் அட்டை வாங்கும் பொதுமக்கள்
Updated On :9 அக்டோபர் 2020, 9:48 am

DIN

திமுகவின் இணையவழி உறுப்பினர் சேர்க்கை 10 லட்சத்தை நெருங்குகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை தெற்கு திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

இணையத்தின் மூலம் திமுகவில் எளிதாக உறுப்பினர் சேர்க்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி முப்பெரும் விழாவில் தொடங்கி வைத்தார். 25 நாட்களிலே 10 லட்சம் புதிய உறுப்பினர்களை நெருங்குகிறது.

Story image

அதன் ஒரு பகுதியாக சென்னை தெற்கு, கலைஞர் நகர் தெற்கு திமுக சார்பில் இணையம்மூலம் உறுப்பினர் சேர்க்கையை எம்ஜிஆர் நகரில் 138 வது வட்ட துணை செயலாளர் எம்.சபரி தலைமையில் பகுதி செயலாளர் கே.கண்ணன் தொடங்கி வைக்க, மாநில வர்த்தகரணி செயலாளர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம் புதிய உறுப்பினர்களுக்கு டிஜிட்டல் உறுப்பினர் அட்டையை வழங்கினார். உடன் வட்ட செயலாளர் இரா செழியன், மு.அன்பழகன், வள்ளிநாயகம், அஜந்தா ரவி, பொன்னுரங்கம், ஏ.ஜெகதீசன், ராமமூர்த்தி, ஆர். சசிகுமார் ஆகியோர் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.