காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஹெட்மயர் அதிரடி: ராஜஸ்தானுக்கு 185 ரன்கள் இலக்கு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 184 ரன்கள் எடுத்தது.

News image
Updated On :9 அக்டோபர் 2020, 3:48 pm

DIN

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 184 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான், தில்லி அணிகள் மோதிக் கொண்டுள்ளன. துபையில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

தில்லியில் முதலில் ப்ரித்வியுடன் களமிறங்கிய தவன் ஆர்சர் வீசிய 2வது ஓவரில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ப்ரித்வியும் ஆர்சரின் 4வது ஓவரில் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயஸ் 22 ரன்களிலும், பண்ட் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

இதையடுத்து களமிறங்கிய ஸ்டொய்னிஸ், ஹெட்மயர் சற்று நிலைத்து ஆட ஸ்டொய்னிஸ் 39 ரன்களில் ஆட்டமிழந்தார், பின் அதிரடியைத் தொடர்ந்த ஹெட்மயர் 24 பந்தில் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.

டை வீசிய 19வது ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்த அக்‌ஷர் 17 ரன்களிலும்,  ஹர்ஷல் 16 ரன்களிலும் அவுட்டானார்கள்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்தது.

ரபாடா (2), அஸ்வின் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.