ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தங்கையை பாலியல் வன்கொடுமை செய்தவரின் கையை வெட்டிய பெண்

ஆந்திரத்தில் தன் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்யதவரின் கையை அரிவாளால் ஒரு பெண் வெட்டியுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :9 அக்டோபர் 2020, 11:14 am

DIN

ஆந்திரத்தில் தன் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்யதவரின் கையை அரிவாளால் ஒரு பெண் வெட்டியுள்ளார்.

சித்தூர் மாவட்டத்தின் திருமலரெடிபள்ளி கிராமத்தில் 15 வயது சிறுமி கால்நடைகளை மேய்பதற்காக காட்டுக்குள் சென்ற போது சங்கரப்பா என்ற தொழிலாளி அப்பெண்ணை பின்தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அச்சிறுமியின் அலறல் சத்ததைக் கேட்டு, சிறுமியின் மூத்த சகோதரி அவளுக்கு உதவ சென்றுள்ளார். அப்போது, சங்கரப்பாவின் கையை அரிவாளால் வெட்டிவிட்டு தனது சகோதரியை அவரிடம் இருந்து காப்பாற்றியுள்ளார்.

இந்நிலையில், சங்கரப்பா அந்த இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில், சங்கரப்பாவை காவல்துறையினர் கைது செய்து பாலியல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.