புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ம.பி.யில் 145 பள்ளிக் கட்டடங்கள் திறப்பு

மத்திய பிரதேசத்தில் ரூ. 497.7 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 145 பள்ளிக் கட்டடங்களை காணொளி மூலம் செவ்வாய்க்கிழமை முதல்வர் சிவராஜ் சிங் செளகான் திறந்து வைத்தார்.

News image

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான்

Updated On :13 அக்டோபர் 2020, 10:31 am

ANI

மத்திய பிரதேசத்தில் ரூ. 497.7 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 145 பள்ளிக் கட்டடங்களை காணொளி மூலம் செவ்வாய்க்கிழமை முதல்வர் சிவராஜ் சிங் செளகான் திறந்து வைத்தார்.

பள்ளிக் கட்டடங்களை திறந்து வைத்து பேசிய முதல்வர் சிவராஜ்,

மாநிலம் முழுவதும் திறக்கப்பட்ட பள்ளிக் கட்டடங்களில் வகுப்பறைகளுடன் ஆய்வகங்கள், நூலகம் மற்றும் விளையாட்டு வளாகங்கள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கல்வியை மட்டுமல்லாமல், அவர்கள் அமர்ந்து பயில கட்டடம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதே அரசின் நோக்கமாக உள்ளது.

மாநிலத்தில் சிறந்த கல்வியை வழங்குவதற்காக புதிதாக 10 ஆயிரம் பள்ளிக் கட்டடங்களை திறக்கவுள்ளோம். இதன்மூலம், ஏழைக் குடும்பங்களின் குழந்தைகளும் நல்ல கல்வியைப் பெற்று தன்னிறைவு அடைவார்கள். 

மத்திய பிரதேசத்தில் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் தரமானதாகவும் சிறந்ததாகவும் மாற்றுவோம் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.