இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் இலக்கு

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது.

News image
விராட் கோலி
Updated On :15 அக்டோபர் 2020, 3:50 pm

DIN

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது.

ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சார்ஜாவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக பின்ச் மற்றும் படிக்கல் களமிறங்கினார்கள், பின்ச் (20), படிக்கல் (18) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பின் களமிறங்கிய விராட் கோலி அதிரடியாக விளையாடி 48 ரன்கள் சேர்த்த போது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார்.

வாஷிங்டன் 13 ரன்களிலும், துபே 23 ரன்களிலும் அவுட்டாக, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிவில்லியர்ஸ் ஷமி பந்தில் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மோரீஸ் ஷமியின் கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி அடித்து 8 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன்மூலம், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.