தெலங்கானா வெள்ளத்தில் ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதம்: முதல்வர்
தெலங்கானாவில் பெய்து வரும் கனமழையால் ரூ. 5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.


தெலங்கானாவில் பெய்து வரும் கனமழையால் ரூ. 5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
தெலங்கனாவில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் கனமழையால் தலைநகரம் ஹைதராபாத் உள்பட பல பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும் 32 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
தெலங்கானா முதல்வரிடம் பிரதமர் மோடி புதன்கிழமை பேசுகையில் வெள்ளத்திற்கான உரிய உதவிகள் விரைவில் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடிக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் எழுதிய சுட்டுரையில் கூறியதாவது,
மாநிலங்களில் ஏற்பட்ட பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது முதற்கட்டமாக நிவாரணப் பணிகளுக்கு ரூ. 1,350 கோடி வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...