ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

புல்வாமாவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

News image

கோப்புப்படம்

Updated On :20 அக்டோபர் 2020, 10:36 am

ANI

புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள காக்போராவில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.

இந்த சண்டையில் தீவிரவாதிகள் 2 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். மேலும், ராணுவம், காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை இணைந்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்படும் மூன்றாவது தீவிரவாதியாகும். முன்னதாக ஷோபியன் மாவட்டத்தில் மெல்ஹோரா பகுதியில் நடந்த ஒரு மோதலில் ஒரு தீவிரரவாதி கொல்லப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.