சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

மகாராஷ்டிர வெள்ள நிவாரணமாக ரூ. 10 ஆயிரம் கோடி அறிவிப்பு

மகாராஷ்டிர வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ரூ. 10 ஆயிரம் கோடியை வெள்ளிக்கிழமை முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

News image

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே

Updated On :23 அக்டோபர் 2020, 10:42 am

PTI

மகாராஷ்டிர வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ரூ. 10 ஆயிரம் கோடியை வெள்ளிக்கிழமை முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

மகாராஷ்டிர ஆளும் கட்சி சார்பில் கூட்டணி தலைவர்களுடன் வெள்ள பாதிப்பு குறித்து இன்று ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் துணை முதல்வர் அஜித் பவாரும் பங்கேற்றார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தாக்கரே, 

மத்திய அரசிடம் வெள்ள நிவாரணமாக ரூ. 38 ஆயிரம் கேட்டுள்ளோம், ஆனால் மத்திய அரசு நிவாரண தொகை இன்னும் வெளியிடவில்லை.

இருப்பினும், தீபாவளி போன்ற பண்டிகை வருவதையடுத்து அதற்குமுன் ரூ. 10 ஆயிரம் கோடி வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் என கூறினார்.

கடந்த வாரம் பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் புணே, வெளரங்காபாத் மற்றும் கொங்கன் பிரிவுகளில் பலர் பலியாகினர், மேலும் பல லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

உஸ்மானாபாத், லாதூர், சோல்பூர், நாந்தேடு மற்றும் பண்டார்பூர் பகுதிகளில் சோயாபீன், பருத்தி மற்றும் கரும்பு போன்ற பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.