உத்தமபாளையத்தில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பொழிவு இருக்கும் என வானிலை அறிவிப்பு வெளியானது. இதில் தேனி மாவட்டத்தில் கனமழை பெய்யும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி ஆண்டிபட்டி, பெரியகுளம் போன்ற பகுதியில் திங்கட்கிழமை மழை பெய்த நிலையில் உத்தமபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மலைப்பொழிவு இன்றி வானம் வறண்டு காணப்பட்ட நிலையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நண்பகல் பெய்த மழை தொடர்ந்து சாரல் மழையாக நீடித்து வருகிறது. உத்தமபாளையத்தில் இந்த திடீர் மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது .
புறவழிச்சாலை, கிராம சாவடி பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் மழை நீர் சாலைகளில் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. இதனை அடுத்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...