கம்பம்: இடுக்கி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடியில் சனிக்கிழமை படகு சவாரி தொடங்கியது.
தேனி மாவட்டம் அருகே உள்ளது சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடி ஏரி. இங்கு படகு சவாரி செய்வதை உள்நாடு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவார்கள்.
கடந்த மார்ச் 10-ல் கரோனா தொற்று காரணமாக, தேக்கடி ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது, தற்போது சுமார் 6 மாதங்களுக்கு பிறகு, சனிக்கிழமை இரண்டு படகுகள் இயக்கப்பட்ட உள்ளதாக கேரள மாநில சுற்றுலா கழகத்தினர் அறிவித்தனர்.
அதன்பேரில் சனிக்கிழமை காலை ஒன்பது முப்பது மணிக்கு மதியம் மூன்று முப்பது மணிக்கு என இரண்டு படகுகள் இயக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்குப் பிறகு தேக்கடி ஏரியில் படகுகள் இயக்கப்பட்டதால் குறைந்த அளவே சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு படகு சவாரி செய்தனர்.
வனத்துறையினர் முக கவசம் மற்றும் கிருமி நாசினி மூலம் கை கழுவுதல் சமூக இடைவெளியை பயன்படுத்துதல் போன்றவைகளை படகு சவாரியின் போது அறிவுறுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


