வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
வ.உ.சிதம்பரனார் 149 வது பிறந்த நாள் விழா ஈரோட்டில் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


ஈரோடு: வ.உ.சிதம்பரனார் 149 வது பிறந்த நாள் விழா ஈரோட்டில் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 149 வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு கருங்கல்பாளையத்தில் ரங்கா பவன் திருமண மண்டபம் அருகே உள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அப்பகுதி கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர் முத்துச்சாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு கருங்கல்பாளையம் பகுதி கழக துணைச் செயலாளர் மகேஸ்வரன், தண்டபாணி, வட்டக் கழக செயலாளர் குணசேகரன், சோழிய வேளாளர் நலச்சங்க தலைவர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...