விவசாயிகளுக்கு எதிரான சட்டம்: 10 ஆயிரம் கையெழுத்து படிவம்

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டங்களை திரும்பப் பெற வலியறுத்தி 10 ஆயிரம் பேரிடம் பெறப்பட்ட கையெழுத்து படிவகங்கள் பிரதமர் மோடிக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
10 ஆயிரம் கையெழுத்து படிவம்
10 ஆயிரம் கையெழுத்து படிவம்

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டங்களை திரும்பப் பெற வலியறுத்தி 10 ஆயிரம் பேரிடம் பெறப்பட்ட கையெழுத்து படிவகங்கள் பிரதமர் மோடிக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில்,  விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் அவசரச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 10 ஆயிரம் பேரிடம் பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் இரா.சச்சிதானந்தம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் என்.பெருமாள், மலைத்தோட்ட விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தங்கவேல் ஆகியோர் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் மூலம் கையெழுத்த படிவகங்களை அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலர் என்.பெருமாள் கூறியதாவது:

மின்சாரச்சட்டம் 2020, அத்தியாவசிய பொருள்கள் அவசர திருத்தச் சட்டம் 2020, வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு (மேம்பாடு மற்றும் உறுதி செய்து கொடுத்தல்) அவசரச் சட்டம் 2020, விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் 2020 ஆகிய சட்டங்களை மத்திய பாஜக அரசு திரும்ப பெற வேண்டும்.

இந்த சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக கூறி, வியாபாரிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அவசரச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி 10 ஆயிரம் பேரிடம் பெறப்பட்ட  கையெழுத்து படிவங்களை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com