கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லியில் திருநங்கை சுட்டுக் கொலை

தில்லி ஷஹ்தாராவின் ஜிடிபி என்க்ளேவ் பகுதியில் திருநங்கை ஒருவர் சனிக்கிழமை நள்ளிரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.

News image
ஏக்தா ஜோஷி
Updated On :7 செப்டம்பர் 2020, 12:30 pm

DIN

தில்லி ஷஹ்தாராவின் ஜிடிபி என்க்ளேவ் பகுதியில் திருநங்கை ஒருவர் சனிக்கிழமை நள்ளிரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.

உத்தரகண்ட் பகுதியைச் சேர்ந்த ஏக்தா ஜோஷி (வயது 42). இவர் தில்லியில் உள்ள ஜிடிபி என்க்ளேவ் பகுதியில் மற்றொரு திருநங்கை அனிதாவுடன் ஒரு வீட்டில் தங்கியிருந்தார்.

மேலும், இவர் மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தி வருகிறார். அவர்கள் பள்ளிக்குச் செல்கின்றனர். அப்பகுதியில் தனது குழு உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் தங்கி வந்தார். 

இவர் சமூக சேவைகளும் செய்து வந்துள்ளார். மேலும், அப்பகுதியில் உள்ள சமூகத்திற்கு தலைவியாகவும் இருந்துள்ளார். இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு அவரது வீட்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், துப்பாக்கிச் சூடு குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. காயமடைந்த ஜோஷியை உடனடியாக மீட்டு மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

தாக்குதல் நடத்தியவர்கள் தலைக்கவசம் அணிந்திருந்ததால் அடையாளம் தெரியவில்லை. ஜோஷியின் உறவினர்களிடம் நடத்திய விசாரணையில், தனிப்பட்ட பகையால் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறினர். மேலும், தினிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதாக கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.