கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இணைய வழியில் இறுதிப் பருவத் தேர்வு -அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இறுதிப் பருவத் தேர்வுகள் செப்.22 முதல் செப்.27 வரை இணைய தளத்தில் நடைபெறும் என  அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

News image
அண்ணா பல்கலைக்கழகம்
Updated On :27 ஜனவரி 2024, 5:17 pm

DIN

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இறுதிப் பருவத் தேர்வுகள் செப்.22 முதல் செப்.27 வரை இணைய தளத்தில் நடைபெறும் என  அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு காரணமாக கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயா் கல்வி நிறுவனங்களில் பருவத்தோ்வுகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து இறுதி பருவத் தோ்வை தவிர, மற்ற அனைத்து தோ்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவா்களுக்கு தோ்ச்சி வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், இறுதியாண்டு பருவத் தோ்வையும் ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. விசாரணை முடிவில் மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், இறுதி பருவத் தோ்வை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்தது.

இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் இறுதி பருவத் தோ்வை இணையவழியில் நடத்துவதற்கான தேதியை இன்று வெளியிட்டது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள கல்லூரிகள், அதன் அங்கீகாரம் பெற்ற தனியாா் கல்லூரிகள் ஆகியவற்றில் படிக்கும் இறுதியாண்டு மாணவா்களுக்கு யுஜிசி வழிகாட்டுதலின்படி ஆன்லைன் முறையில் செப்டம்பர் 22 முதல் 27 வரை தோ்வுகள் நடைபெறும். 

மேலும், தேர்வு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் முறையில் அமையும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.