ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

மகாராஷ்டிரத்தில் கரோனாவால் 19 பத்திரிகையாளர்கள் பலி

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 19 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

மகாராஷ்டிரத்தில் கரோனாவால் 19 பத்திரிகையாளர்கள் பலி (கோப்புப்படம்)

Updated On :11 செப்டம்பர் 2020, 1:48 pm

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 19 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்க காலாத்தில் தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் காவலர்களை போலவே பத்திரிகையாளர்களும் களத்தில் செயல்பட்டனர்.

அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் இதுவரை 19 பத்திரிகையாளர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

அதில், புணேவைச் சேர்ந்த பாண்டுரங் ராஜ்கரன், நாக்பூரைச் சேர்ந்த சுனில் ஷெட்டி, நிதின் பட்கரே மற்றும் சாகர் ஜாதவ், மாத்தேரனைச் சேர்ந்த சந்தோஷ் பவார், தானே பிரசாந்த் கம்ப்லி ஆகியோர் சமீபத்தில் உயிரிழந்தவர்கள் என மராத்திய பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.