நீட் தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை ரத்து செய்த மத்திய அரசிற்கு எதிராக மக்களவையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் செவ்வாய்க்கிழமை உரையாற்றினார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் பேசுகையில்,
மருத்துவ உயர்கல்வி நீட் தேர்வில், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இல்லை என்ற அறிவிப்பு நாடு முழுவதும் அதிர்ச்சியை உருவாக்குகிறது. இதன்மூலம் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் பயன்பெறும் 3700 பேர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதில், அதிக பாதிப்புகளை பெறும் மாநிலமாக தமிழகம் உள்ளது, ஏனெனில் தமிழகத்தில் அதிக மருத்துவ கல்லூரிகள் உள்ளது. இதன் மூலம் மத்திய அரசிற்கு அதிக இடங்களைக் கொடுக்கும் மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இருக்கும் நிலையில், மத்திய அரசிற்கு தரும் பட்சத்தில் 23 சதவீத இடத்தை இழக்கிறோம்.
தற்போது மாநிலத்திற்கு உள்ள 27 சதவீதமும் இல்லை என்று சொன்னால் 50 சதவீத இடத்தையும் இழக்க நேரிடும். இது மிகவும் ஆபத்தான நிலை, சமமற்றவர்களை சமமாக நடத்தகூடாது என்பது தான் இட ஒதுக்கீட்டின் முக்கிய அம்சம். அதனால் தான் சமூகரீதியாக, கல்வி ரீதியாக இட ஒதிக்கிடு வழங்க வேண்டும் என அரசியல் சாசன சட்டம் சொல்கிறது.
இந்த அறிவிப்பின் மூலம், அரசியல் சாசன சட்டம் தரும் உரிமையை மத்திய அரசு பறிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இட ஒதுக்கீட்டையே கைவிடும் நிலைக்கு தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது எனவே மத்திய அரசு நீட் தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு ரத்தை நிறுத்த வேண்டும் என பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சமத்துவ சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்: அண்ணாமலை

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்! வங்கி, டிஜிட்டல் சேவைகள் கடும் பாதிப்பு!

தலைமை எடுக்கும் முடிவு நம் விருப்பத்துக்கேற்ப இல்லாவிட்டாலும் அதனை ஏற்பதே ... மாணிக்கம் தாகூர் பதிவு!

ஈரானைத் தாக்க ராணுவ உதவி மறுப்பு! ஸ்பெயின் உடனான வர்த்தகத்தை துண்டித்தார் டிரம்ப்!!
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

