முதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக 13,410 புகார்கள் : மத்திய அமைச்சர்

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக கடந்த 6 மாதத்தில் 13,410 புகார்கள் வந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

News image

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி

Updated On :22 செப்டம்பர் 2020, 1:45 pm

ANI

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக கடந்த 6 மாதத்தில் 13,410 புகார்கள் வந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்கள் குறித்து மாநிலங்களவையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த அறிக்கையில்,

கடந்த மார்ச் 1, 2020 முதல் செப்டம்பர் 18, 2020 வரையில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான 13,410 புகார்கள் தேசிய பெண்கள் ஆணையத்தில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், வாட்ஸசப் மூலம் 1,443 புகார்கள் பெறப்பட்டது.

இதில், 4,350 புகார்கள் "வீட்டு வன்முறைக்கு எதிரான பெண்களைப் பாதுகாத்தல்" என்ற பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் 968 புகார்கள் பெறப்பட்டுள்ளது. 

கரோனா பொதுமுடக்கம் அறிவித்த பிறகு, தேசிய பெண்கள் ஆணையம் சார்பாக வீட்டு வன்முறை வழக்குகளைப் புகாரளிப்பதற்காக ஏப்ரல் 10 ஆம் தேதி ஒரு வாட்ஸ்அப் எண் - 7217735372 ஐ அறிமுகப்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.