ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஈரோட்டில் வழக்கறிஞர்கள் பணி புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் வழக்கறிஞர்கள் கோரிக்கை வலியுறுத்தி பணியை புறக்கணித்து செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்
Updated On :22 செப்டம்பர் 2020, 2:02 pm

DIN

ஈரோடு: ஈரோட்டில் வழக்கறிஞர்கள் கோரிக்கை வலியுறுத்தி பணியை புறக்கணித்து செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு, பாண்டிச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டுக்குழுவின் பொதுக்குழு முடிவின்படி, ஈரோடு சம்பத் நகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் அசோசியேஷன் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வழக்கறிஞர்கள் அசோசியேஷன் தலைவர் நல்லசிவம் தலைமை தாங்கினார். செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். இதில், வழக்கறிஞர்கள் மீது காவல் துறையில் வழக்குப்பதிவு ஆகி இருந்தால் பார் கவுன்சிலில் இருந்து நீக்கி விடுகின்றனர். வக்கீல்களிடம் உரிய விசாரணை மேற்கொண்டு பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்நது, வழக்கறிஞர்கள் அசோசியேஷனை சேர்ந்த வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் பணி புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.