திருச்சி: திருச்சி மாநகரில் காணாமல் போன 130 செல்லிடப் பேசிகளை, காவல்துறையினர் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமை வகித்து, மீட்கப்பட்ட செல்லிடப் பேசிகளை உரியவர்களிடம் வழங்கினார். சுமார் ரூ. 16.31 லட்சம் மதிப்பிலான 130 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், செல்லிடப்பேசிகள் காணாமல் போனால் உடனடியாக காவல் துறையிடம் புகார் தெரிவியுங்கள். தாமதமாக புகார் அளித்தால் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படும் என கூறினார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த செல்போன்கள், சைபர் கிரைம் காவல்துறை முயற்சியால் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையர்கள் பவன்குமார், வேதரத்தினம், கூடுதல் துணை ஆணையர் ரமேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


