மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ரூ. 500 திருடியதாக நண்பனின் தாயால் கொல்லப்பட்ட சிறுவன்

ஒடிசாவில் தனது மகனின் நண்பனான 14 வயது சிறுவனை ரூ. 500 திருடியதாகக் கூறி அடித்து கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

News image

கோப்புப்படம்

Updated On :25 செப்டம்பர் 2020, 11:22 am

ஒடிசாவில் தனது மகனின் நண்பனான 14 வயது சிறுவனை ரூ. 500 திருடியதாகக் கூறி அடித்து கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள கியாபனோபோஷி கிராமத்தில் ராஜன் பெஹெரா (வயது14) என்ற ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது நண்பன் வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார்.

அங்கு சிறிது நேரம் விளையாடிய ராஜன் தன் வீட்டிற்கு திரும்பிச் சென்றுள்ளார். இதன்பின், நண்பனின் தாயாரான சஸ்மிதா பெஹெரா (36) வீட்டிலிருந்த ரூ. 500 காணவில்லை என தனது மகனிடம் விசாரித்துள்ளார்.

இதன்பின், ராஜனை அழைத்து குச்சியால் அடித்து விசாரித்துள்ளார் சஸ்மிதா. இதையடுத்து வீட்டிற்கு திரும்பிய ராஜன் பலத்த காயத்தால் சற்று நேரத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த கிராமவாசிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சஸ்மிதா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறை கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.