சுட்டது ஒரு எஸ்.ஐ., காப்பாற்றியது ஒரு எஸ்.ஐ.: தில்லியில் உயிர் பிழைத்த பெண்!
தில்லியில் காவல் உதவி ஆய்வாளரால் சுட்டுக் கொல்ல முயன்ற பெண்ணை மற்றொரு உதவி ஆய்வாளர் காப்பாற்றியதாக காவல் துணை ஆணையர் தெரிவித்தார்.


தில்லியில் காவல் உதவி ஆய்வாளரால் சுட்டுக் கொல்ல முயன்ற பெண்ணை மற்றொரு உதவி ஆய்வாளர் காப்பாற்றியதாக காவல் துணை ஆணையர் தெரிவித்தார்.
தில்லி லாகூரி கேட் பகுதியில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் சந்தீப் தஹியா. மனைவியுடன் பிரிந்து வாழும் இவர், வேறொரு பெண்ணுடன் கடந்த ஒரு வருடமாக தொடர்பில் இருந்து வந்தார்.
இந்நிலையில், ஜி.பி.கே சாலை பகுதியில் அப்பெண்ணுடன் செல்லும் போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சந்தீப் கோபத்தில் அந்த பெண்ணை சுட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதையடுத்து, அடிபட்ட அந்த பெண்ணை அவ்வழியே சென்ற அலிப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெய்வீர் கண்டார். பின் அந்தப் பெண்ணை காரில் ஏற்றிக் கொண்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினார்.
தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளது, மேலும் சந்தீப் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றோம் என காவல் துணை ஆணையர் கெளரவ் சர்மா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...