கரோனாவில் இருந்து மீண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கரோனா தொற்றில் இருந்து மீண்டதாக புதன்கிழமை தெரிவித்தார்.

மத்திய நெடுச்சாலைத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி

மத்திய நெடுச்சாலைத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கரோனா தொற்றில் இருந்து மீண்டதாக புதன்கிழமை தெரிவித்தார்.
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தாலும், வாழ்த்துக்களாலும், நான் கரோனாவிலிருந்து மீண்டுள்ளேன் என்பதை உங்கள் அனைவருக்கும் சொல்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும், உங்கள் அனைவரின் பாசத்திற்கு நன்றி" என தெரிவித்தார்.
நிதின் கட்கரிக்கு கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...