கீழடி 6 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி நிறைவு: 913 பொருள்கள் கண்டுபிடிப்பு

வைகை நதி நாகரிகத்தின் 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது  தமிழக தொல்பொருள் துறையால் 913 பொருள்கள் கண்டுபிக்கப்பட்டது.
கீழடி 6-ம் கட்ட அகழாய்வு பணி நிறைவு (கோப்புப்படம்)
கீழடி 6-ம் கட்ட அகழாய்வு பணி நிறைவு (கோப்புப்படம்)

வைகை நதி நாகரிகத்தின் 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது  தமிழக தொல்பொருள் துறையால் 913 பொருள்கள் கண்டுபிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி, அகரம், கொண்டகை மற்றும் மணலூரில் தமிழக அரசால் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கப்பட்ட 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி கரோனா பேரிடர் காரணமாக மார்ச் 24 முதல் மே 19 வரை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தொடங்கிய ஆராய்சி இன்றுடன் (புதன்கிழமை) நிறைவடைகிறது.

இந்த ஆறாம் கட்டத்தில், ஒரு களிமண் சூளை (மணலூரில்), டெரகோட்டா முத்திரை, கால்நடை எலும்புகள், எலும்புக்கூடுகள், செதில்கள், 10 பானைகள் (கொண்டகை), கத்திகள், ஒரு தங்க நாணயம், கிண்ணம் போன்ற பதிவுகள், சீன மண்பாண்டங்கள் மற்றும் ஒரு சுருட்டுத் துண்டு உள்ளிட்ட 913 பொருள்கள் 4 இடங்களில் இருந்தும் எடுக்கப்பட்டது.

சிவகங்கை மண்டலத்தை தவிர, தூத்துகுடியின் சிவகலை, ஆதிச்சச்சனல்லூர் மற்றும் ஈரோட்டின் கொடுமணல் ஆகிய இடங்களிலும் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகின்றது.

இதுவரை, 15,451 பொருள்கள் மத்திய மற்றும் மாநில அகழ்வாராய்ச்சி துறையால் மீட்கப்பட்டுள்ளன.

மத்திய அகழ்வாராய்ச்சி நிறுவனமான (ஏ.எஸ்.ஐ.) நடத்திய அகழ்வாராய்ச்சியின் முதல் 3 கட்டங்களில் 7,818 தொல்பொருள் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மாநில தொல்லியல் துறையால் கருவிகள் மற்றும் 21 அடுக்கு வளையக் கிணறு உட்பட 7,633 பொருள்கள் கண்டுபிடித்துள்ளது.

அகழ்வாராய்ச்சி பணிக்காக 392 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் மற்றும் 76 குழிகள் தோண்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com