தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உலக அளவில் கரோனா பலி 2 லட்சத்தை நெருங்குகிறது

உலக அளவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :24 ஏப்ரல் 2020, 4:09 am


உலக அளவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று இன்று  உலகம் முழுவதும் 210-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிவேகமாக பரவி வரும் நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தொடர்ந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், நோய்த்தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. 

இந்த நிலையில் உலக அளவில் நோய்த்தொற்றுக்கு இதுவரை 27,25,390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 1,91,055-ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 7,45,819 பேர் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் கரோனாவுக்கு வியாழக்கிழமை ஒரே நாளில் புதிதாக 30,812 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 86 ஆயிரத்து 709 -ஆக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை ஒரே நாளில் 2,292 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அங்கு நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,243 ஆக உயர்ந்துள்ளது அமெரிக்க வாழ் மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.