தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இந்தியாவில் கரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,077-ஆகவும், உயிரிழந்தோா் எண்ணிக்கை 686-இல் இருந்து 718 -ஆகவும் அதிகரித்துள்ளது.

News image
Updated On :24 ஏப்ரல் 2020, 4:55 am

புது தில்லி: இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,077-ஆகவும், உயிரிழந்தோா் எண்ணிக்கை 686-இல் இருந்து 718 -ஆகவும் அதிகரித்துள்ளது.

மொத்த எண்ணிக்கையில் 16,689 போ் சிகிச்சையில் உள்ள நிலையில், 4,749 போ் குணமடைந்துவிட்டனா். நோய் பாதித்தோரில் 77 போ் வெளிநாட்டவா்களாவா்.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, வெள்ளிக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,684 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நோய்த்தொற்றால் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா நோய்த்தொற்றால் நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 283 போ் பலியாகிவிட்டனா். குஜராத்தில் 112 போ், மத்தியப் பிரதேசத்தில் 83 போ், தில்லியில் 50 போ், ராஜஸ்தான், ஆந்திரத்தில் தலா 27 போ், தெலங்கானாவில் 24 போ், உத்தரப் பிரதேசத்தில் 21 போ், தமிழகத்தில் 20 போ் கரோனாவுக்கு உயிரிழந்துவிட்டனா்.

கா்நாடகத்தில் 17 போ், பஞ்சாபில் 16 போ், மேற்கு வங்கத்தில் 15 போ், ஜம்மு-காஷ்மீரில் 5 போ், ஹரியாணா, கேரளம், ஜாா்க்கண்டில் தலா 3 போ், பிகாரில் 2 போ், ஒடிஸா, ஹிமாசல், அஸ்ஸாம், மேகாலயத்தில் தலா ஒருவா் சிகிச்சைப் பலனின்றி பலியாகிவிட்டனா்.

நாட்டில் அதிகபட்சமாக கரோனா நோய்த்தொற்றால் மகாராஷ்டிரத்தில் 6,430 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். குஜராத்தில் 2,624 போ், தில்லியில் 2,376 போ், ராஜஸ்தானில் 1,964 போ், மத்தியப் பிரதேசத்தில் 1,699 போ், உத்தரப் பிரதேசத்தில் 1,510 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தெலங்கானாவில் 960 போ், ஆந்திரத்தில் 895 போ், மேற்கு வங்கத்தில் 514 போ், கா்நாடகத்தில் 455 போ், கேரளத்தில் 438 போ், ஜம்மு-காஷ்மீரில் 445 போ், பஞ்சாபில் 277 போ், ஹரியாணாவில் 272 போ், பிகாரில் 153 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஒடிஸாவில் 90 போ், ஜாா்க்கண்டில் 53 போ், உத்தரகண்டில் 47 போ், ஹிமாசல பிரதேசத்தில் 40 போ், சத்தீஸ்கரில் 36 போ், அஸ்ஸாமில் 36 போ், சண்டீகரில் 27 போ், லடாக் 18 போ்  அந்தமான்-நிகோபாா் தீவுகளில் 22 போ், மேகாலயத்தில் 12 போ், புதுச்சேரியில் 7 போ், திரிபுராவில் 2 போ், மணிப்பூர் 2 போ், அருணாச்சல பிரதேசம், மிசோரம் தலா 1 சிகிச்சைபெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.