/

தமிழகத்தில் இன்று புதிதாக 6,495 பேருக்கு கரோனா: மேலும் 94 பேர் பலி

தமிழகத்தில் புதிதாக  6,495  பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (ஆக. 30, ஞாயிற்றுக் கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரேநாளில் 94 பேர் உயிரிழந்துள்ளனர்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:13 pm

DIN

தமிழகத்தில் புதிதாக  6,495 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (ஆக. 30, ஞாயிற்றுக் கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 94 ஒரேநாளில்  பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது..

அதன்படி, தமிழகத்தில் புதிதாக 6,495 பேருக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவாக சென்னையில் 1,249 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் மொத்த பாதிப்பு 4,22,085 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கரோனா தொற்றால் இன்று 94 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 7,231 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில் இன்று ஒரே நாளில் 6,406 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,62,133பேர் குணமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.