திருப்பூரில் கரோனா பாதிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் உதவியாளர் பலி: மாவட்டத்தில் முதல் பலி

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா நொய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் உதவியாளர் புதன்கிழமை உயிரிழந்தார். இதுவே கரோனாவுக்கு மாவட்டத்தில் முதல் பலி. 
திருப்பூரில் கரோனா பாதிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் உதவியாளர் பலி: மாவட்டத்தில் முதல் பலி


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கரோனா நொய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் உதவியாளர் புதன்கிழமை உயிரிழந்தார். இதுவே கரோனாவுக்கு மாவட்டத்தில் முதல் பலி. 

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளதில் 116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்த நிலையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் திருப்பூரை அடுத்த மங்கலம் பகுதியில் தங்கியுருந்து அவிநாசிபாளையத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸில் உதவியாளராகப் பணியாற்றி வந்துள்ளார். 

இந்நிலையில், அந்த இளைஞருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதால் ஜூன் 18 ஆம் தேதி முதல் அவர் கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

திருப்பூர் மாவட்டத்தில் கரோனாவால் 120 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முதல் பலி ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com