தில்லியில் மேலும் 3,324 பேருக்கு கரோனா
By ANI | Published On : 14th October 2020 09:24 PM | Last Updated : 14th October 2020 09:24 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 3,324 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
இன்று புதிதாக 3,324 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 3,17,548 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 44 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 5,898 ஆக உயர்ந்துள்ளது.
இன்று தொற்றில் இருந்து 2,867 பேர் குணமடைந்துள்ளதால் மொத்தம் 2,89,747 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 21,903 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.