நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

‘வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோம்’: மம்தா

வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்குவங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

News image

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

Updated On :4 ஜனவரி 2021, 9:18 pm IST

வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்குவங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் தில்லியில் தொடர்ந்து 40வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு மாநில அரசுகளும், எதிர் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வேளாண் சட்டங்கள் குறித்து மேற்குவங்க முதல்வர் பேசுகையில்,

நான் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கின்றேன். நாடு மற்றும் விவசாயிகளின் நலனுக்காக மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்.

சட்டம் இயற்றுவதற்கு முன்பே, அவர்கள் சேமிப்புக் கிடங்குகளை உருவாக்கினார்கள். அதனால் தான் சட்டங்களை திரும்பப் பெறவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்குவங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் எனக் கூறினார்.

இதற்குமுன் ஹரியாணா, தில்லி, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.