மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் உடல்நிலை சிறிது முன்னேற்றம் அடைந்துள்ளதாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் புதன்கிழமை தெரிவித்தார்.
கடந்த திங்கள்கிழமை விபத்தில் சிக்கிய மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக், கோவா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில், அவரது உடல்நிலைக் குறித்து கோவா முதல்வர் கூறியதாவது,
மத்திய அமைச்சர் உடல்நிலை சிறிது முன்னேற்றம் அடைந்துள்ளது. செயற்கை சுவாசக் கருவியிலிருந்து அதிக ஓட்டம் கொண்ட ஆக்ஸிஜனுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.
தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு, கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் இன்று காலை அவரை பரிசோதனை செய்தார்கள். அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவா மருத்துவர்கள் அவரை கண்காணிப்பார்கள் என்று கூறினார்.
ஸ்ரீபாத் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவர் ராஜேஸ்வரி கூறுகையில்,
"அவரது சுவாசம், இரத்த அழுத்தம் மற்றும் பிற உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் முன்னேற்றம் அடைந்துள்ளது" என்று மதிப்பீடு செய்த பின்னர் கூறினார் .
மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சரும், கோவா வடக்கு தொகுதி பாஜக எம்.பி.யுமான ஸ்ரீபாத் எஸ்ஸோ நாயக், தனது மனைவி விஜயா நாயக், உதவியாளா் தீபக் ராமதாஸ் உள்ளிட்ட 4 போ் கோவாவில் இருந்து கா்நாடக மாநிலம், வட கன்னட மாவட்டத்திலுள்ள எல்லாப்பூா் சென்றுள்ளனா். எல்லாப்பூரில் இருந்து திங்கள்கிழமை இரவு கோகா்ணாவுக்கு காரில் புறப்பட்டுள்ளனா். அங்கோலா வட்டம், ஹொசகம்பி கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் திடீரெனக் கவிழ்ந்துள்ளது. இதில் மத்திய இணையமைச்சா் ஸ்ரீபாத் நாயக் உள்ளிட்டோா் படுகாயமடைந்தனா்.
இதனிடையே, சிகிச்சை பலனளிக்காமல் மத்திய இணையமைச்சா் ஸ்ரீபாத் நாயக்கின் மனைவி விஜயா நாயக், உதவியாளா் தீபக் ராமதாஸ் ஆகிய இருவரும் உயிரிழந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் பிரிவை வலுப்படுத்த பஜாஜ் ஆட்டோ திட்டம்!
பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!!

முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து!

ம.பி.: மொஹரம் ஊர்வலத்தின் போது மின்சார கம்பியில் தாஜியா உரசியதில் 3 பேர் பலி, 10 பேர் காயம்
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan



