வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கரோனா அதிகரிப்பிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாத மதுக்கடைகள்

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து புதிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுக்கடைகளுக்கான கட்டுப்பாடுகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

News image
கரோனா அதிகரிப்பிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாத மது கடைகள்
Updated On :8 ஏப்ரல் 2021, 10:07 am

DIN

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து புதிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுக்கடைகளுக்கான கட்டுப்பாடுகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில், தமிழகத்தில் நாள்தோறும் 4,000 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து, வியாழக்கிழமை புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அந்த அரசாணையில், கோயம்பேடு சில்லைறை வியாபாரத்திற்கு தடை, பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிக்க தடை, வணிக வளாகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிகமான வாடிக்கையாளர்கள் கூடும் மதுபான கடைகளுக்கு எந்த விதமான பிரத்யேக கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாதது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கரோனா அதிகமாக பரவும் சூழலில், மதுபான கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.