வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

புதுவை: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஏப்.15-ல் தடுப்பூசி

புதுச்சேரியில் கரோனா பரவலை குறைக்க பல்வேறு தரப்பினர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News image
புதுவை: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஏப்.15-ல் தடுப்பூசி
Updated On :8 ஏப்ரல் 2021, 2:26 pm

DIN

புதுச்சேரியில் கரோனா பரவலை குறைக்க பல்வேறு தரப்பினர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநிலங்களும் தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதுவை மாநிலத்தில் பல்வேறு தரப்பினர்களுக்கு தடுப்பூசி செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 9-ல் உணவக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, ஏப்ரல் 10-ல் வங்கி, எல்ஐசி ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, ஏப்ரல் 13-ல் பான்லே பால்விநியோக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, ஏப்ரல் 15-ல் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.