மகாராஷ்டிரத்தில் பொதுமுடக்கம்: வெறிச்சோடிய சாலைகள்
மகாராஷ்டிரத்தில் இன்று வார இறுதி நாள் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.


மகாராஷ்டிரத்தில் இன்று வார இறுதி நாள் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், மகாராஷ்டிரத்தில் நாள்தோறும் 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இதையடுத்து, கரோனா கட்டுப்பாடுகளுக்கு புதிய விதமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் மாநில அரசு அறிவித்தது.
அதன்படி, வார இறுதி நாள்களுக்கான பொது முடக்கம் வெள்ளிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்குத் தொடங்கி திங்கள்கிழமை தோறும் காலை 7 மணிக்கு நிறைவுபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வார நாள்களில் இரவு நேர ஊரடங்கு இரவு 8 மணிக்குத் தொடங்கி காலை 7 மணிக்கு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வார இறுதி நாளான இன்றும், நாளையும் மாநிலம் முழுவதும் பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படுகிறது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் காவல்துறை பலத்த கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், மும்பை, புணே உள்ளிட்ட முக்கிய நகரங்களின் சாலைகள் வாகனங்கள், பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...