மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

மேற்கு வங்க திரிணமூல் வேட்பாளர் கரோனாவுக்கு பலி

மேற்கு வங்கத்தின் கர்தாஹா சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட காஜல் சின்ஹா கரோனா தொற்று ஏற்பட்டு இன்று உயிரிழந்தார்.

News image

மேற்கு வங்க திரிணமூல் வேட்பாளர் கரோனாவுக்கு பலி

Updated On :25 ஏப்ரல் 2021, 6:28 am

ANI

மேற்கு வங்கத்தின் கர்தாஹா சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட காஜல் சின்ஹா கரோனா தொற்று ஏற்பட்டு இன்று உயிரிழந்தார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற கர்தாஹா தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் காஜல் சின்ஹா போட்டியிட்டார்.

இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட சின்ஹா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.

இதுகுறித்து மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் தலைவருமான மம்தா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,

மிக மிக வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. கர்தாஹா தொகுதியில் போட்டியிட்ட எங்கள் வேட்பாளர் காஜல் சின்ஹா கரோனாவால் உயிரிழந்தார். அவர் தனது வாழ்க்கையை மக்களுக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணித்தார், சளைக்காத பிரச்சாரத்தை மேற்கொண்டார். அவர் நீண்ட காலமாக கட்சியின் உறுதியான உறுப்பினராக இருந்தார். தற்போது நாங்கள் அவரை இழந்துள்ளோம். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.