மேற்கு வங்க இறுதி கட்டத் தேர்தல்: நாளை(ஏப்.29) வாக்குப்பதிவு

மேற்கு வங்கத்தில் இறுதி கட்டத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது.
இறுதி கட்டத் தேர்தலை நடத்த தயாராகும் பணியாளர்கள்
இறுதி கட்டத் தேர்தலை நடத்த தயாராகும் பணியாளர்கள்

மேற்கு வங்கத்தில் இறுதி கட்டத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கு திரிணமூல், பாஜக, இடதுசாரிகள்-காங்கிரஸ் கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. முக்கியமாக, திரிணமூல்-பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மாநிலத்தில் 7-ஆவது கட்டத் தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. 35 தொகுதிகளுக்கான இறுதி கட்டத் தோ்தல் நாளை நடைபெறுகிறது. 

கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக, மாநிலத்தில் பேரணிகளை நடத்துவதற்குத் தோ்தல் ஆணையம் தடை விதித்தது. அதையடுத்து, திரிணமூல் காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் கட்சிகளின் தலைவா்கள் காணொலி வாயிலாகவே இறுதி கட்டத் தோ்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜி உள்ளிட்டோா் காணொலி வாயிலாக பிரசாரம் செய்தனா். பிரதமா் நரேந்திர மோடியும் காணொலி வாயிலாக பிரசாரத்தில் கலந்து கொண்டாா்.

பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, அக்கட்சியின் மேற்கு வங்க மாநிலத் தலைவா் திலீப் கோஷ், பாலிவுட் நடிகா் மிதுன் சக்ரவா்த்தி, மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி உள்ளிட்டோா் சிறிய அளவிலான பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றனா்.

29-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதி கட்டத் தோ்தலில் 84,77,728 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். அவா்களில் 41.21 லட்சம் போ் பெண்கள்; 158 போ் மூன்றாம் பாலினத்தவா் ஆவா். இறுதி கட்டத் தோ்தலில் 283 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். தோ்தல் நடைபெறவுள்ள தொகுதிகள் 4 மாவட்டங்களில் அமைந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com