மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நாடு முழுவதும் கரோனாவால் 162 மருத்துவர்கள் பலி

நாடு முழுவதும் 162 மருத்துவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

News image

நாடு முழுவதும் 162 மருத்துவர்கள் கரோனாவுக்கு பலி

Updated On :2 பிப்ரவரி 2021, 9:39 am

நாடு முழுவதும் 162 மருத்துவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.29 முதல் நடைபெற்று வருகின்றன. இதில், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களின் தகவல்கள் குறித்த கேள்விக்கு மத்திய சுகாதாத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளார்.

அவர் நாடாளுமன்றத்திற்கு அளித்த பதிலில்,

கரோனாவால் இதுவரை நாடு முழுவதும் 162 மருத்துவர்கள், 107 செவிலியர்கள் மற்றும் 44 சுகாதாரத்துறை பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல் ஜனவரி 22ஆம் தேதி வரை மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்டதன் அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.