தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மார்ச் 1-ல் கூடுகிறது உத்தரகண்ட் சட்டப்பேரவை

உத்தரகண்ட் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 1ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவை

Updated On :2 பிப்ரவரி 2021, 10:00 am

ANI

உத்தரகண்ட் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 1ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதியை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் அறிவித்து வருகின்றன. இந்நிலையில் உத்தரகண்ட் மாநில பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதியை மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மாநில அரசு வெளியிட்ட செய்தியில்,

மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தொடரின் போது, 2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட் மார்ச் 4ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

கரோனா பரவல் காரணமாக சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.