தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உத்தரகண்ட் சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ. 11,000 ஊக்கத்தொகை அறிவிப்பு

உத்தரகண்ட் மாநிலத்தில் கரோனா பிரிவில் பணியாற்றிய சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ. 11,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாநில முதல்வர் திரிவேந்திர சிங் அறிவித்துள்ளார்.

News image

திரிவேந்திர சிங் ராவத்

Updated On :2 பிப்ரவரி 2021, 2:40 pm

ANI

உத்தரகண்ட் மாநிலத்தில் கரோனா பிரிவில் பணியாற்றிய சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ. 11,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாநில முதல்வர் திரிவேந்திர சிங் அறிவித்துள்ளார்.

கரோனா நோய்த் தொற்றின் பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களாக நாடு முழுவதும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றனர். நோயாளிகளுக்கு சுகாதாரப் பணியாளர்களால் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து பலர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.

இதையடுத்து கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய சுகாதாரப் பணியாளர்களுக்கு உத்தரகண்ட் அரசு ஊக்கத் தொகை அறிவித்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில்,

கரோனா பிரிவில் பணிபுரிந்த மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகையாக ரூ.11,000 வழங்கப்படும். மேலும், சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.