எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

துரோகிகளை வைத்து மேற்குவங்கத்தை வெல்ல பாஜக திட்டம்: மம்தா

திரிணமூலில் இருந்து விலகிய துரோகிகளை வைத்து மேற்குவங்கத்தில் வெற்றி பெற பாஜக திட்டமிட்டுள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)
Updated On :4 பிப்ரவரி 2021, 12:22 pm

ANI

திரிணமூலில் இருந்து விலகிய துரோகிகளை வைத்து மேற்குவங்கத்தில் வெற்றி பெற பாஜக திட்டமிட்டுள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் கடந்த இரண்டு மாதங்களில் சுவேந்து அதிகாரி உள்பட சில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

இதுகுறித்து கொல்கத்தாவில் நடந்த கூட்டத்தில் பேசிய மம்தா கூறுகையில்,

திரிணமூலில் இருந்து விலகிய துரோகிகளை வைத்து மேற்குவங்கத்தில் வெற்றி பெற பாஜக திட்டமிட்டுள்ளது. பாஜகவுக்கு செல்வோர், அது வன்முறையாளர்கள் கட்சி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அங்கு செல்பவர்கள் அனைவரும் அவர்களது சொத்துக்கள் மற்றும் அவர்களை பாதுகாத்துக் கொள்ளவே செல்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.