இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

11 மாதங்களுக்கு பிறகு கம்பத்திலிருந்து கம்பமெட்டுக்கு பேருந்து இயக்கம்

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கம்பமெட்டுக்கு 11 மாதங்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை முதல் பேருந்து இயக்கப்பட்டது.

News image

கம்பத்திலிருந்து  கம்பமெட்டுக்கு பேருந்து இயக்கம்

Updated On :5 பிப்ரவரி 2021, 12:17 pm

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கம்பமெட்டுக்கு 11 மாதங்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை முதல் பேருந்து இயக்கப்பட்டது.

கரோனா தொற்று பரவல் பொதுமுடக்கம் காரணமாக தமிழக கேரள போக்குவரத்து முடக்கப்பட்டது. பின்னர் கம்பம் குமுளி பேருந்து போக்குவரத்து ஜன. 6-இல் தொடங்கப்பட்டது. இதற்கிடையே கம்பம் கம்பமெட்டுக்கு போக்குவரத்து இயக்கப்படாமல் இருந்து வந்தது. வெள்ளிக்கிழமை முதல் கம்பத்திலிருந்து கம்பமெட்டுக்கு தமிழக எல்லை வரை காலை மற்றும் மாலை என நான்கு முறை இயக்க அனுமதிக்கப்பட்டது. எல்லைப்பகுதி வரை என்பதால் கம்பமெட்டு பேருந்தில் எதிர்பார்த்த அளவு பயணிகள் செல்லவில்லை.

இதுகுறித்து அய்யப்பன் என்பவர் கூறும் போது, கம்பத்திலிருந்து கேரளாவுக்குள் பேருந்து போக்குவரத்து சென்று வந்தால்தான் எதிர்பார்த்த கூட்டம் சேரும், குமுளி மற்றும் கம்பமெட்டு தமிழக எல்லை வரை இயக்கினால், எதிர்பார்க்கின்ற பயணிகள் வரமாட்டார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.