அசாமில் உள்ள விமான நிலையங்களில் மார்ச் 1ஆம் தேதி முதல் கரோனா பரிசோதனை கட்டாயமில்லை என மாநில அரசு தெரிவித்துள்ளது.
கரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு 2020 மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது.
இந்நிலையில் வருகின்ற மார்ச் 1 முதல் அசாம் விமான நிலையங்களில் கரோனா பரிசோதனை கட்டாயமில்லை என அசாம் சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுட்டுரை செய்தியில்,
கரோனா பரவல் வருவதையும், தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறுவதையும் கருத்தில் கொண்டு, ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் கட்டாய கரோனா பரிசோதனையை மார்ச் 1 முதல் நிறுத்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
இருப்பினும், பயணிகள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

காப்புக்காட்டில் நாளை தொல்காப்பியா் பிறந்த நாள் விழா

தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று தேரோட்டம்
போலி வாகன காப்பீடு வழங்கிய நெல்லை இளைஞா் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


