இன்று நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்
இன்று நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்

இன்று நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்

நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று (பிப்.15) நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று (பிப்.15) நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள் வழக்கமான கட்டணத்தை விட இருமடங்கு செலுத்த வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஃபாஸ்டேக் முறைக்கு மாறுவதற்கான அவகாசம் இன்று நள்ளிரவுடன் முடியும் நிலையில் மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இனியும் கால அவகாசம் அளிக்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கெனவே ஜனவரி 1-ம் தேதி முதல் வாகனங்களில் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், பிப்ரவரி 15-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதில் அவ்வப்போது தொகையை வரவு வைத்துக் கொள்ளலாம். சுங்கச் சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது, அங்கு பொருத்தப்பட்டுள்ள கருவி, ‘ஃபாஸ்டேக்’ வில்லை வாயிலாகக் கட்டணத்தைக் கழித்துக் கொள்ளும். இந்த வசதியின் மூலமாக சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக, வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நேரம் வெகுவாகக் குறையும்.

அனைத்து சுங்கச் சாவடிகளிலும், இணையவழியிலும், வங்கிகள் வாயிலாகவும் ‘ஃபாஸ்டேக்’ வில்லையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com