டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

உசிலம்பட்டியில் டி.என்.டி. சான்றிதழ் கேட்டு சாலை மறியல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் டி.என்.டி. சான்றிதழ் கேட்டு விவசாய சங்கத் தலைவர் ஐயா கண்ணு தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

News image
உசிலம்பட்டியில் டி.என்.டி. ஒற்றை சான்றிதழ் கேட்டு சாலை மறியல்
Updated On :17 பிப்ரவரி 2021, 11:36 am

DIN

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் டி.என்.டி. சான்றிதழ் கேட்டு விவசாய சங்கத் தலைவர் ஐயா கண்ணு தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

உசிலம்பட்டி   பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை அருகே  டி.என்.டி. சீர்மரபினர் நல வாரிய சங்கத்தினர் டி.என்.டி. ஒற்றைச் சான்றிதழ் வழங்கக்கோரியும், டி.என்.டி. ஜாதிக்கணக்கு எடுக்கக் கோரியும், டி.என்.டி. இரட்டைச் சான்றிதழ்  வேண்டாம் எனவும் சீர்மரபினர் நல வாரியம் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், தமிழக அரசு கோரிக்கையை நிறைவேற்றக் கோரி  சாலையில் படுத்து விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சீர்மரபினர் சங்கத்தினர் ஆதிசேடன், தவமணி அம்மாள் மற்றும் நல வாரியத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனார்.

இதனையடுத்து, மறியலில் ஈடுபட்ட ஐயா கண்ணு உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டு தாலுகா காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.