டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

‘மேற்குவங்க பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு’: அமித்ஷா

மேற்குவங்கத்தில் உள்ள பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை பாஜக அரசு வழங்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
Updated On :18 பிப்ரவரி 2021, 11:11 am

ANI


மேற்குவங்கத்தில் உள்ள பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை பாஜக அரசு வழங்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 5வது கட்ட பிரசாரத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

அதில் அவர் பேசுகையில்,

மேற்குவங்கத்தை சொர்க்கவங்கமாக மாற்றுவதற்கான பாஜகவின் போராட்டம் இது. மம்தாவின் ஆட்சியை அகற்றி, பாஜக ஆட்சிக்கு வருவது மட்டுமே எங்கள் நோக்கம் இல்லை. மேற்குவங்கத்தின் நிலைமை, ஏழைகளின் நிலைமை, மாநில பெண்களின் நிலைமை மாற்றம் செய்வதை உறுதி செய்வதே எங்களின் குறிக்கோள்.

மேற்குவங்கத்தில் உள்ள பெண்களுக்கு அரசுப் பணிகளில் 33 சதவீத இடஒதுக்கீட்டை பாஜக அரசு வழங்கும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.