விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தேர்தல் குறித்த புகார் அளிக்க ‘சி-விஜில் ஆப்’

சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை வெளியாகியுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் குறித்த புகார்களை ‘சி-விஜில்’ செயலி மூலம் அளிக்கலாம் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா தெரிவித்துள்ளார்.

News image

சி-விஜில்

Updated On :26 பிப்ரவரி 2021, 1:15 pm

புது தில்லி: சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை வெளியாகியுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் குறித்த புகார்களை ‘சி-விஜில்’ செயலி மூலம் அளிக்கலாம் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை அறிவித்தார்.

அதன்படி, தமிழகம், புதுச்சேரி, கேரளத்துக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஒரே கட்டமாக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று தலைமைத்தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா அறிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாகவும், அசாமில் 3 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதையடுத்து இன்று மாலை 4.30 மணிமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பான புகார்களை தேர்தல் ஆணையத்தில் ‘இசி-விஜில்’ செயலி மூலம் பதிவு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.