/

தில்லியில் மேலும் 306 பேருக்கு கரோனா

தில்லியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 306 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :11 ஜனவரி 2021, 4:08 pm

தில்லியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 306 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 306 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 6,30,506 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 13 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 10,691 ஆக உயர்ந்துள்ளது.

இன்று தொற்றில் இருந்து 407 பேர் குணமடைந்துள்ளதால் மொத்தம் 6,16,461 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 3,354 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.